/* */

பவானி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட பெண் காவலர்

காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை, பவானி காவல் நிலைய பெண் காவலர் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.

HIGHLIGHTS

பவானி ஆற்றில்  தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட பெண் காவலர்
X

மீட்கப்பட்ட பாட்டி செல்லம்மாளுடன் காவலர் ஆனந்தவள்ளி.

ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலையத்தில், பணியாற்றும் பெண் காவலர் ஆனந்தவள்ளி. இவர் சம்பவத்தன்று தனது பணியை முடித்துவிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு மொபட்டில் சென்றார். அப்போது, பவானி காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் மேல் மூதாட்டி ஒருவர் ஏறி தற்கொலை செய்து கொள்வதற்காக, காவிரி ஆற்றில் குதிக்க முயன்றார். இதைப்பார்த்து, பெண் காவலர் ஆனந்தவள்ளி மூதாட்டியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் பெண் காவலர் ஆனந்தவள்ளி விசாரித்தார்.

அப்போது அந்த மூதாட்டி தனது பெயர் செல்லம்மாள் (வயது 76) என்றும், பவானி அருகே உள்ள வரதநல்லூர் கிராமத்தில் கணவருடன் வசித்து வந்ததாகவும், கணவர் தன்னை விட்டுச் சென்று விட்டார். மேலும் குழந்தைகள் யாரும் இல்லாததால் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அதனால் தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினார். இதையடுத்து பெண் போலீஸ் ஆனந்தவள்ளி மூதாட்டி செல்லம்மாளை குமாரபாளையத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்து சென்று சேர்த்து விட்டார்.‌ இதனால், பெண் காவலரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 22 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?