/* */

காய்கறி ஈஸியா கிடைக்குது... மளிகைப்பொருட்கள்? குமுறும் பொதுமக்கள்

ஈரோட்டில், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி எளிதாக கிடைக்கும் நிலையில், மளிகை பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

காய்கறி ஈஸியா கிடைக்குது... மளிகைப்பொருட்கள்? குமுறும் பொதுமக்கள்
X

ஈரோடு மாநகர் பகுதியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகர் பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் 132 வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பிறகு 250 வண்டிகளில் காய்கறி மளிகை பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழக அரசு ஊரடங்கை வரும் ஜூன் 7ஆம் தேதி வரை நீடித்துள்ளது. தற்போது கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் காய்கறிகள் பழங்கள் மளிகை பொருட்கள் நடமாடும் வண்டிகள் மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் குடியிருப்புக்கு சென்று வினியோகிக்கப்படுகிறது. இதனால், காய்கறியை பொருத்தவரை, மக்களுக்கு பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

ஆனால் மளிகை பொருட்களை தான் வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். மாநகர் பகுதியில் 20 நடமாடும் வண்டிகள் மூலம் மட்டுமே மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓரிரு நாட்களில் கூடுதல் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக பெரிய மளிகைக்கடைகள் மூலம், டோர் டெலிவரியாக வீடுகளுக்கே சென்று மளிகைப்பொருட்களை விநியோகம் செய்யலாம் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 May 2021 1:00 PM GMT

Related News