/* */

ஈரோடு: அந்தியூர் பெரிய ஏரி சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.50 லட்சம்

அந்தியூர் பெரிய ஏரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 50 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஈரோடு: அந்தியூர் பெரிய ஏரி சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.50 லட்சம்
X

அமைச்சர் ராமச்சந்திரனை சந்தித்து நன்றி தெரிவித்த அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். அடுத்த படம்:- கடந்த டிசம்பர் மாதம் அந்தியூர் பெரிய ஏரியில் ஆய்வு மேற்கொண்ட அந்தியூர் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ரூ. 50 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. சட்டசபையில், நேற்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் விவாதத்துக்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்த வண்ணம் இயற்கை அழகினை ரசிக்க, இனிமையான அனுபவங்களை வழங்கும் வகையில் இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் படகு இல்லம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

இது அந்தியூர் பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்தியூர் பெரிய ஏரி படகு இல்லம் மற்றும் பிற வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என உத்தரவிட்ட அமைச்சர் ராமச்சந்திரனை அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Updated On: 20 April 2023 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு