/* */

ஈரோடு: செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் 150 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு: செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்
X

செவிலியர்கள் (கோப்பு படம்).

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 150 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது:-

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 150 செவிலியர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு, 50 வயது வரை உள்ளவர் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படமாட்டாது. பணியில், சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) , திண்டல், ஈரோடு மாவட்டம் , ஈரோடு - 638 012. தொலைபேசி எண் - 0424 2431020. என்ற முகவரிக்கு வரும், 27-ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்படும்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Updated On: 17 Jan 2023 6:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...