பவானி நகராட்சியில் பத்திரப்பதிவு தடை நீக்கப்படுமா.? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் பத்திர பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை எப்போது நீக்கப்படும் என என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பவானி நகராட்சியில் பத்திரப்பதிவு தடை நீக்கப்படுமா.? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
X

Erode news, Erode news today- பவானி நகராட்சி அலுவலகத்தில் பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாகக் கருதப்படும் பகுதிகளில் பத்திரப்பதிவுகள் செய்ய தடை விதிக்கப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக சொத்துக்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, வருவாய் துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறைக்கு பொதுமக்கள் கோரி்க்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதியன்று தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை, பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தும் கோரிக்கை மனுவை அளித்தனர்.


மேலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்த மறுக்கின்றனர். எனவே, வக்பு வாரியத்தின் உரிமையுள்ள சர்வே எண்களைத் தவிர, பிற பகுதிகளுக்கு பத்திரப் பதிவுகள் தடையின்றி நடைபெற உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்பினர். இந்த நிலையில், பவானி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் பத்திரப்பதிவு தடை நீக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. வக்பு வாரியத்தின் கோவை சரக ஆய்வாளர் மன்சூர் அகமது மற்றும் வருவாய், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


அப்போது பேசிய மன்சூர் அகமது, பவானி நகராட்சிப் பகுதியில் நிலஉரிமை தொடர்பான ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக பள்ளிவாசல் உட்பட 4 சொத்து இனங்கள் அடையாளம் காணப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே, பாக்கியுள்ள பகுதிகளுக்கு தடை நீக்கல் குறித்து பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்படும். இதன் பின்னர் பதிவுத்துறை உரிய உத்தரவுகள் பிறப்பிக்கும். எனவே, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Updated On: 19 March 2023 10:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
 2. சினிமா
  யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
 3. சினிமா
  ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
 4. சினிமா
  திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
 5. திருவில்லிபுத்தூர்
  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு
 6. உசிலம்பட்டி
  உசிலம்பட்டி அருகே ரத்த தானம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
 7. சினிமா
  கமல் படத்தில் இணையும் அஜித் விஜய்.. இயக்குவது நம்ம லோகேஷ்!
 8. உசிலம்பட்டி
  உசிலம்பட்டி அருகே பாலை சாலையில் ஊற்றி போராட்டம்
 9. சினிமா
  மஞ்சக்காட்டு மைனா... நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் வைரல்
 10. நாமக்கல்
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பூசாரிகள் பேரவை...