/* */

99.29 அடியாக குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 741 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

99.29 அடியாக குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
X

Erode news, Erode news today- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு ஆதாரங்களாக விளங்குகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், அணையில் இருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்

நீர் மட்டம் - 99.29 அடி ,

நீர் இருப்பு - 28.17 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 741 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 1,358 கன அடி),

நீர் வெளியேற்றம் - 2,950 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1800 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1,000 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் 2,950 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 2 Feb 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்