/* */

கோபியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

School Building Construction-கோபி நகராட்சிக்குட்பட்ட பூங்கா மற்றும் இரண்டு பள்ளிகளில் கட்டப்பட்ட 6 கூடுதல் வகுப்பறைகளை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர்.முத்துசாமி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கோபியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
X

Erode news, Erode news today -கோபி வடக்கு பூங்கா, அரசு பள்ளி கட்டிடங்களை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். உடன் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட செயலாளர் நல்லசிவம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

School Building Construction-ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்டட பூங்கா உள்ளிட்ட ரூ. 65 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், கோபி நகர்மன்ற தலைவர் .நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி சிறப்பு அழைப்பாளாக கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்துத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுத்து வருகிறார். தண்ணீர் தேங்கும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியானது, கடந்த ஒரு வருடமாகவே நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு இடங்களையும் பார்வையிட்டுள்ளார். தற்போது சென்னையில் பெய்து வரும் கடும் மழையிலும் தண்ணீர் தேங்காமல் உள்ளதற்கு காரணம் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கட்டிமுடிக்கபட்டு விற்பனை செய்யப்படாமல் உள்ள வீடுகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராத வட்டியை குறைத்து விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், கோபி அருகே உள்ள கீரிப்பள்ளம் ஓடை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கோபி அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் விளாங்கோம்பை கிராமப்பகுதிக்கு போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால், அந்த கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுள்ளது. அக்குழந்தைகளின் கல்வி தொடர, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உண்டு உறைவிடப்பள்ளி அமைப்பதற்கான கருத்துரு உருவாக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளது. அதுவரையில் அந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகளை விளாங்கோம்பை பகுதியிலிருத்து 6 கிலோமீட்டர் தொலைவில் வினோபா நகரில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்று வர, தற்காலிகமாக திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோபி தாசில்தார் ஆசியா, நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், அவைத்தலைவர் பெருமாள்சாமி , நகராட்சி பொறியாளர் சிவக்குமார், முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்துரவி, ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னிமலை, புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர்கள் சிவபாலன் (டி.என்.பாளை யம்), செந்தில்குமார் (நம்பியூர்), துரைராஜ் (பவானி), கோரக்காட்டூர் ரவீந்திரன் (கோபி வடக்கு) பேரூர் செயலாளர்கள் பழனிச்சாமி (சலங்கபாளையம்), ஆனந்தகுமார் (நம்பியூர்),பொறியாளர் அணி நிர்வாகி கருணாமூர்த்தி, நகராட்சி சுகாதார அலுவலர் சோழராஜ், ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்திர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Nov 2022 7:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  3. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  4. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  6. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  7. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  8. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  9. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்