/* */

ஈரோட்டில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Erode news, Erode news today- தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி ஈரோட்டில் இன்று (சனிக்கிழமை) முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
X

Erode news, Erode news today- ஈரோட்டில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்.

Erode news, Erode news today- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் " ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி இன்று (சனிக்கிழமை) ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பின்னர், இதுகுறித்து, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து தமிழ்நாடு அரசின் அரும்பணிகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் உள்ளடக்கிய "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஈரோடு சத்தி சாலையில் அமைந்துள்ள சிக்கைய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று (மார்ச்.18) தொடங்கி வருகின்ற 27-ம் தேதி வரை 10 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.


மேலும், இக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி, மகளிர் சுய உதவிக்குழுவின் தெருவோர உணவகம், சிறுதானியம், மற்றும் பல்வேறு உணவுடன் கூடிய உணவுத்திருவிழா, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப் பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு, மாணவர்களுக்கு பயிற்சி முகாம்கள், பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மகளிர் திட்டம், கைத்தறித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக்காட்சி, உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மாணவ,மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், கருத்தரங்குகள், மற்றும் பட்டிமன்றங்கள், வணிகக்கடைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டு பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இ-பட்டா மாறுதல் ஆணையினையும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குனாமடைந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் தலா ரூ.2000/- பெருவதற்கான ஆணையிளையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் , ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறையின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்கள். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த வீடியோ படக்காட்சியினையும் பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டலக்குழு தலைவர் சுப்பிரமணி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) சின்னசாமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கெட்சி லீமா அமலினி, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கோதை, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் மோகன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி, மாவட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) தங்க விக்னேஷ், ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பாலாஜி (செய்தி), கலைமாமணி (விளம்பரம்), மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 March 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  2. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  4. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  5. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  6. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  8. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  9. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  10. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...