/* */

ஜி.கே.வாசன் பற்றி அவதூறு பேச்சு; தமாக இளைஞரணி தலைவர் யுவராஜா கண்டனம்

Erode news, Erode news today- ஜி.கே.வாசன் பற்றி அவதூறு பேசியதாக அமைச்சர் த.மோ.அன்பரசனுக்கு தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஜி.கே.வாசன் பற்றி அவதூறு பேச்சு; தமாக இளைஞரணி தலைவர் யுவராஜா கண்டனம்
X

Erode news, Erode news today- தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா (பைல் படம்). 

இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா அறிக்கை;

Erode news, Erode news today- அண்மையில் சென்னை குன்றத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய திருநாட்டின் இரு மாபெரும் பிரதமர்களை உருவாக்கிய காலம் சென்ற தலைவர் மூப்பனார் மறைவுக்கு பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களால் ஒருமனதாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற தலைவர் ஜி கே வாசன்.

காலம் சென்ற மாபெரும் தலைவர் மூப்பனார் உயிரோடு உள்ளவரை தனது புதல்வர் ஜி.கே வாசன் மீது அரசியலில் நிழல் கூட படாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு வைத்திருந்தவர். ஆனால், குடும்ப அரசியலே கட்சியின் கொள்கை என மன்னர் ஆட்சி போல் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் திமுகவினருக்கு தலைவர் வாசன் அவர்களைப் பற்றி பேச அருகதை இல்லை.‌ அப்பா முதல்வர் மகன் துணை முதல்வர் மற்றொரு மகன் மத்திய மந்திரி மகள் நாடாளுமன்ற எம்பி மருமகன் மத்திய மந்திரி என்று தன் குடும்பத்துக்கே கட்சியை தாரை வார்த்த திமுகவினர் வாசனை பற்றி பேசக்கூடாது.

வாரிசு அரசியல் பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை. உங்கள் தலைவரின் கீழ் உள்ள அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் கட்சிக்காக உழைத்தவனுக்கு பதவி கொடுக்கவில்லை. உங்கள் வழிவந்த உங்கள் மகன்களுக்கு பதவியை தாரை வார்த்து கொடுத்துள்ளீர்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்கிற அகந்தையில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என வாய்க்கு வந்தார் போல் பேசுவதும் வரலாறு தெரியாமல் பேசுவதும் நல்ல அரசியல்வாதிக்கு அழகல்ல.

1996 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரசியல் முகவரி கொடுத்தவர் மறைந்த மக்கள் தலைவர் மூப்பனார் என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது. இத்துடன் வாசன் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என தமாகா இளைஞரணி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 March 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை