/* */

ஈரோடு: 310 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு; ஆணையை வழங்கிய அமைச்சர் முத்துசாமி

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மொடக்குறிச்சி,‌‌ கொடுமுடி பகுதிகளில் ரூ.26.31 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 310 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

HIGHLIGHTS

ஈரோடு:  310 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு; ஆணையை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
X

Erode news, Erode news today- இச்சிபாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை அமைச்சர் முத்துசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி ஊராட்சி, நேதாஜி நகர், மொடக்குறிச்சி வட்டம், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி மற்றும் கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான ஆணையினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி கூறுகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதில் பெரும் பாலும் சாதாரண மக்களும், தாய்மார்களும் பயன்பெறும் குறிப்பாக இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தாய்மார்களுக்கு பெருமளவில் பயனடையும் வகையில் உள்ளது.

அந்த வகையிலே, வீடு இல்லாதவர்கள் அனைவரும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் எனும் தொலைநோக்கு பார்வை யாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு இல்லாதர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெருந்துறை வட்டம், திருவாச்சி ஊராட்சி, நேதாஜி நகரில் கட்டப்பட்டுள்ள 204 வீடுகள் 121 வீடுகளுக்கும், மொடக்குறிச்சி வட்டம், நஞ்சை ஊத்துக்குளியில் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 96 வீடுகளில் 37 வீடுகளுக்கும், கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள 276 வீடுகளில் 152 வீடுகளுக்கும் என மொத்தம் 310 குடியிருப்புகளுக்கு இன்று ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது.

பெருந்துறை வட்டம், திருவாச்சி ஊராட்சி, நேதாஜி நகரில் கட்டப்பட்டுள்ள ஒரு குடியிருப்பின் பயனாளியின் பங்குத்தொகை ரூ.17,700 மற்றும் அரசு பங்குத்தொகையாத ரூ.8.68 இலட்சம் என சேர்ந்து தலா ரூ.8.85 இலட்சம் மதிப்பீட்டில் 121 வீடுகளுக்கும், என ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான ஆணையினையும், மொடக்குறிச்சி வட் டம், நஞ்சை ஊத்துக்குளி பயனாளியின் குடியிருப்புகளுக்கான ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஒரு குடியிருப்பின் தொகை ரூ.1,00,000 மற்றும் அரசு பங்குத்தொகையாக ரூ.8.60 இலட்சம் என சேர்ந்து தலா ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் 37 வீடுகளுக்கும், என ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆணையினையும் கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு குடியிருப்பின் பயனாளியின் பங்குத்தொகை ரூ.49,000 மற்றும் அரசு பங்குத்தொகையாக ரூ.8.76 இலட்சம் என சேர்ந்து தலா ரூ.9.25 இலட்சம் மதிப்பீட்டில் 152 வீடுகளுக்கும், என ரூ.14.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான ஆணையினையும் என மொத்தம் 310 குடியிருப்புகளுக்கு ரூ.28.31 கோடி மதிப்பிலான ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது என, தெரிவித்தார்.

மேலும், ஒதுக்கீட்டு ஆணை பெற்ற பயனாளிகள் அனைவரும் தங்கள் வாழ்க் கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை சரியான முறையிலும், சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரித்துக் கொள்ள வேண்டும். தனது வீட்டினை மட்டுமில்லாமல் முழ கட்டிடத்தினையும் பராமரித்துக் கொள்ள வேண்டும் என பயனாளிகளிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகப் பொறியாளர் வெங்கடேசன், உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் பிரசன்னா, வருவாய் வட்டாட்சியர் சிவசங்கர் (பெருந்துறை), சண்முக சுந்தரம் (மொடக்குறிச்சி), மாசிலாமணி (கொடுமுடி), உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...