/* */

பவானி அருகே சட்டவிரோதமாக சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானி அருகே சட்டவிரோதமாக சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

பவானி அருகே சட்டவிரோதமாக சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர்
X

Erode news, Erode news today- சாக்கடையில் சிவப்பு நிறத்தில் ஓடும் சாயக்கழிவுநீர்.

Erode news, Erode news today- பவானி அருகே சட்டவிரோதமாக சாக்கடையில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், செங்காடு, பி.பெ.அக்ரஹாரம், ராசாம்பாளையம், கங்காபுரம், வெண்டிபாளையம், பெரியசேமூர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட துணி சாயமிடும் தொழிற்சாலைகள், 100 பிளீச்சிங் பட்டறைகள், 800 துணி சாயமிடுதல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 30-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இதில், குறைவான தொழிற்சாலைகள் மட்டுமே, முறையான அனுமதி பெற்று பூஜ்ஜியம் டிஸ்சார்ஜ் செய்து கழிவு நீரை வெளியேற்றுகிறது; அல்லது மறுசுழற்சி செய்கின்றனர். மற்ற ஆலைகள் அனைத்தும், கழிவு நீரை தேக்கியும் இரவு, பகல் என 24 மணிநேரமும், சாக்கடை கால்வாய், பிளாஸ்டிக் குழாய் அமைத்து அந்தந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கலக்க செய்கின்றனர். இப்பிரச்சனையினை இம்மாவட்ட மக்கள் அறிந்ததே.

இந்நிலையில், பவானியை அடுத்த காடையம்பட்டி மற்றும் சேர்வராயன்பாளையத்தில் சாயப்பட்டறைகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இங்குள்ள சாயப்பட்டறைகள் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றுவதால் நீர்நிலைகள் மாசடைவதாக புகார் எழுந்துள்ளது. பவானி - அத்தாணி சாலையில் உள்ள சிறுபாலம் வழியாக சாயக்கழிவுநீர் சனிக்கிழமை பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்ட அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இக்கழிவு நீர் நேரடியாகச் சென்று பவானி ஆற்றில் கலப்பதாகத் தெரிவித்தனர். இதனால், குடிநீர் தேவைக்கும், பாசனத்துக்கும் பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மாசடைவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக சாயக்கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 March 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  3. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  7. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!