/* */

தீபாவளி போனஸ் ரூ. 17.64 கோடி; 27, 653 நெசவாளர்களுக்கு வழங்கல்

Tamilnadu Co Operative Society- ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 27,653 உறுப்பினர்களுக்கு ரூ.17.64 கோடி மதிப்பீட்டில் போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகையை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

HIGHLIGHTS

தீபாவளி போனஸ் ரூ. 17.64 கோடி;  27, 653 நெசவாளர்களுக்கு வழங்கல்
X

Erode news, Erode news today- சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு போனஸ் தொகையினை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

Tamilnadu Co Operative Society- ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் இன்று ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கைத்தறி துறையின் சார்பில் 22 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 5,275 உறுப்பினர்களுக்கு ரூ.6.71 கோடி மதிப்பீட்டில் போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்ததாவது: கைத்தறி துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் மொத்தம் 188 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. மேற்படி சங்கங்களில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலாபத்தில் செயல்படும் சங்கங்களின் சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கங்களில் இலாபத்தில் செயல்பட்டு வரும் 152 சங்கங்களின் 27,653 சங்க உறுப்பினர்களுக்கு ரூ.17.64 கோடி மதிப்பீட்டில் போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகை வழங்கப்படுகிறது.


மாவட்டத்தில் நெசவு தொழில் நெசவாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்ற சூழ்நிலையில், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 75 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் வாரியங்கள் மூலம் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 51 வயது முதல் 59 வயது வரையிலான நெசவாளர்கள் இறக்கும் போது வாரிசுதாரர்களுக்கு ரூ.1.50 இலட்சம் காப்பீடும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரையிலான நெசவாளர்கள் இறக்கும் போது வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சம் காப்பீடும், மேலும், பிரதான் மந்திரி இ-முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளர் ஒருவருக்கு 6 சதவீதம் வட்டியுடன் ரூ.50,000/- கடனாகவும் வழங்கப்படுகிறது.


மேலும், தள்ளுபடி மானியமாக 20 மற்றும் 30 சதவீத தள்ளுபடி மானியம், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் சந்தை விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு, பங்கு மூலதனம், பிராண்ட் முன்னேற்ற விளம்பரம், உற்பத்தி பல்வகைப்படுத்துதல், வடிவமைப்பு வளர்ச்சி, வட்டி மானிய திட்டத்தின் கீழ் சங்கங்கள் பெற்றுள்ள காசுக்கடனுக்கான வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியம், வடிவமைப்பாளர்களுக்கு தேசிய வடிவமைப்பு நிறுவனத்தினரால் பயிற்சி, கைத்தறி குழுமம் மூலம் ஈரொடு மாவட்டத்தில் சென்னிமலை, ஜம்பை, அன்னை பவானி, நசியனூர் ஆகிய நான்கு கைத்தறி குழுமங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை பகுதியில் 25 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இதில் 22 சங்கங்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. 9356 உறுப்பினர்கள் உள்ளனர். பெட்ஷீட், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், துண்டுகள் மற்றும் அகர்லிக் சால்வை இரகங்கள் ஆகியவை இரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. 2021-2022-ஆம் ஆண்டு மொத்த விற்பனை ரூ.94,90,80,829/ மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2021-2022-ஆம் ஆண்டிற்கான நிகர லாபம் ரூ.7,94,47,965/- ஆகும். அந்த வகையில் இன்றைய தினம், 5275 பயனாளிகளுக்கு மொத்த போனஸ் தொகை ரூ.6,13,03,014/- மற்றும் பங்கு ஈவுத்தொகை 14 சதவீதம் ரூ.58,01,853/- என வழங்கப்படுகிறது.


நெசவாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்களில் பசுமை வீடு திட்டத்தில், 247 உறுப்பினர்கள் இலவச மின்சாரம் பெறும் திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் 3812 உறுப்பினர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 60 வயது கடந்த 2079 உறுப்பினர்கள் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 119 உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சங்கங்களில் பணியாற்றும் சங்க பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டு நிரந்தரம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கென அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் பத்மநாபன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், இணை இயக்குநர் / மேலாண்மை இயக்குநர் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்டெக்ஸ்) தமிழரசி, கைத்தறி துறை உதவி இயக்குநர் சரவணன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Oct 2022 11:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!