/* */

ஈரோடு மாவட்டத்தில், 82, 849 மின் இணைப்பு எண்கள், ஆதாருடன் இணைப்பு

Erode news, Erode news today-ஈரோடு மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம் மூலமாக 82 ஆயிரத்து 849 மின் இணைப்பு எண்களுடன், ஆதார் இணைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில், 82, 849 மின் இணைப்பு எண்கள், ஆதாருடன் இணைப்பு
X

Erode news, Erode news today-ஈரோடு மாவட்டத்தில், 82, 849 மின் இணைப்பு எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

Erode news, Erode news today - தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதார் எண் இணைக்கப்பட்டால் மட்டுமே, மின் கட்டணத்தை செலுத்த முடியும். எனவே 'ஆன்லைன்' மூலமாக, மின் கட்டணம் செலுத்தி வரும் நுகர்வோர், தங்களது ஆதார் எண்களை 'ஆன்லைன்' மூலமாகவே இணைத்து விடுகிறார்கள். மேலும், மின் அலுவலகத்தில் சென்று மின் கட்டணம் செலுத்தும்போது ஆதார் எண் கொடுத்தும் இணைத்து கொள்ளலாம் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஆதார் எண் இணைப்பதில் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்தது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் தங்களது ஆதார் எண்ணை தான் இணைக்க வேண்டுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

இதற்கு முழுமையான விளக்கம், மின்சார வாரியம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரம் எந்தவகையில் தடை படாது என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என்றும், வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டு உரிமையாளரின் ஒப்புதல் கொடுத்தால் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து, பொதுமக்களும் ஆர்வமாக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள். இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தினமும் காலை 10.30 மணியில் இருந்து மாலை 5.15 மணி வரை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில், 2 கணினிகள் மூலமாக ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இதில் வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

இதுகுறித்து மின்சார வாரிய அலுவலர்கள் கூறியதாவது;

மின்சார வாரிய அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் ஆதார் அட்டையின் அசல் அல்லது நகல், மின் இணைப்பு அட்டை அல்லது மின் இணைப்பு எண் எழுதி எடுத்து வந்து கொடுத்தால் கணினி மூலமாக இணைத்து கொடுக்கப்படும். அதற்கான குறுந்தகவல் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு சென்றுவிடும். இந்த முகாம் பண்டிகை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரத்தில் 7 நாட்களுக்கும் செயல்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை முகாம் நடைபெறும். 82,849 மின் இணைப்புகள் ஈரோடு நகரம், ஈரோடு தெற்கு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 6 கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும் முகாம் நடக்கிறது. மேலும், பொதுமக்கள் பலர் தாங்களாகவே ஆன்லைனில் ஆதார் எண்ணை இணைத்து கொள்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 9 லட்சத்து 15 ஆயிரத்து 227 இணைப்புகளில், இதுவரை 82 ஆயிரத்து 849 மின் இணைப்புகளில் ஆதார் எண் சேர்க்கப்பட்டு உள்ளது என்று கூறினர்.

Updated On: 30 Nov 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...