/* */

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

Erode news, Erode news today - ஈரோட்டில் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிட கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை திருடியதாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

  Erode news, Erode news today- கைதான யுவராஜ், வசந்த், பாஸ்கர்

ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான இயந்திரங்களை திருடிய 3 வாலிபர்கள் கைது

Erode news, Erode news today - ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தை சேர்ந்த நல்ல சாமி மகன் மகேந்திரன் (45), கட்டிட கான்ட்ராக்டர். மகேந்திரன் பூசாரி தோட்டத்தில் அவர் வேலை செய்யும் புதிய கட்டிடத்திற்கு அருகில், தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான டிரிலிங் மெஷின், மர கட்டிங் மெஷின், இரும்பு கட்டிங் மெஷின், ராவுட்டர், கிரேன் மெஷின் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி தகர கொட்டகையின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கட்டுமான இயந்திரங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து மகேந்திரன் ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், ஈரோடு மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்த பெரியசாமி மகன் யுவராஜ் (22), பெரியவலசு திலகர் வீதியை சேர்ந்த தெய்வ சிகாமணி மகன் பாஸ்கர் (25), மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் வசந்த் (26) ஆகிய 3 பேர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கட்டுமான இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

ஈரோடு சிறுவலூர் போலீசார், கொளப்பலூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, காந்தி நகர் பகுதியில் உள்ள காலியிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறுவலூர் அண்ணா வீதியை சேர்ந்த சிவக்குமார் (43), நம்பியூர் கெட்டிசெவியூர் மகேந்திரன் (24), சரவணன்(28), தொட்டிபாளையம் முருகேசன்(51), கொளப்பலூர் பிரபாகரன்(37) மற்றும் 18 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.7,540ஐ பறிமுதல் செய்தனர்.

பெண் தூக்கிட்டு தற்கொலை

சத்தியமங்கலம் ஆலத்து கொம்பை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வராஜ் (44). இவரது மனைவி நேத்ரா (41), இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். நேத்ராவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி நேத்ராவுக்கு கடுமையான வயிற்று வலியின் காரணமாக வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர், நேத்ராவை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து. பின்னர், மேல்சி கிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேத்ரா உயிரிழந்தார். இது குறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Nov 2022 1:30 PM GMT

Related News