/* */

ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், வருகிற 1-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி
X

Erode news, Erode news today- ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இதுகுறித்து,  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில், வருகிற 1-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பொதுமக்களிடம் வழங்கி, செறிவூட்டப்பட்ட அரிசியினை நேற்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட்டார்.

பின்னர், இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு உள்ள இரும்புச்சத்து, ரத்த சோகை மற்றும் நரம்பு சம்பந்தமான குறைபாடுகளை போக்கும் வகையில், ரேசன் கடைகளில் முக்கிய சத்துக்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) குடும்ப அட்டைதாரர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.


செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், தாதுக்கள், வைட்டமின் B12 மற்றும் முக்கிய சத்துகள் உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியானது, இரத்த சோகையினை தடுக்கின்றது, கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் உறுதுணையாக நன்மை பயக்கும் வகையில் உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) சிவக்குமரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பானுமதி, துணைப் பதிவாளர் (பொது விநியோக திட்டம்) கந்தசாமி, துணை மேலாளர் (தரக் கட்டுப்பாடு) மனோகரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 29 March 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்