/* */

ஈரோடு மாநகராட்சியில் ரூ.629 கோடிக்கு பட்ஜெட்

Erode news, Erode news today- ஈரோடு மாநகராட்சி நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வருவாய் ரூ.629 கோடியாகவும், செலவு ரூ.622 கோடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சியில் ரூ.629 கோடிக்கு பட்ஜெட்
X

Erode news, Erode news today- நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மேயர் நாகரத்தினம்.

Erode news, Erode news today- ஈரோடு மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைப்படி, மாநகராட்சி வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வியின் நிதி என மொத்த வருவாய் ரூபாய் 622.12 கோடி. இதில் மொத்த மூலதன செலவு மற்றும் சாதாரண செலவு ரூபாய் 622.89 கோடி. உபரியாக 6.22 கோடி ரூபாய் இருக்கும்.

மாநகராட்சியில் தார்சாலைகளை சீரமைக்க 7.20 கோடி ரூபாய், மண்சாலையை தார்சாலையாக மாற்ற 5 கோடி ரூபாய்க்கான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைப்பதற்கு பத்து கோடி ரூபாய்க்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் இரண்டு புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. தற்போது ஈரோடு அருகே உள்ள சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சத்தி ரோட்டில் 14.55 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 80 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு கருத்துரு அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பள்ளிகளுக்கு நடப்பு நிதியாண்டில் கூடுதலாக வகுப்பறைகள் மற்றும் பராமரிப்பு செலவுக்காக எட்டு கோடியே அறுபத்து எட்டு லட்சம் மானியம் வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ரூபாய் 100 கோடி செலவில் சீரமைத்து இருபுறங்களிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேயர் நாகரத்தினம் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்தார். அவரிடம் ஈரோடு மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் மல்லிகா நடராஜன், மாநகராட்சியின் பட்ஜெட் புத்தகத்தை வழங்கினார். ஈரோடு மாநகராட்சியின் 2023 2024 ஆம் நிதியாண்டின் நிதி உபரி 6.22 கோடி ஆகும். ஈரோடு மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், பொறியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!