/* */

சென்னிமலை கோவில்களில் உண்டியல் திறப்பு; ரூ. 8 லட்சம் காணிக்கை

erode news, erode news today- சென்னிமலை கோவில்களில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில், பக்தர்கள் காணிக்கையாக ரூ. 8 லட்சம் வரை செலுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

சென்னிமலை கோவில்களில் உண்டியல் திறப்பு; ரூ. 8 லட்சம் காணிக்கை
X

erode news, erode news today-  உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள்.

erode news, erode news today- சென்னிமலை மாரியம்மன் கைலாசநாதர் கோவில்களில் பக்தர்கள் ரூ.8 லட்சத்துக்கு மேல் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோவில் கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை மாரியம்மன் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

சென்னி மலை டவுன், காங்கயம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து உணடியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதையடுத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதன் மூலம் உண்டியலில் பக்தர்கள் ரொக்கமாக ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 964 காணிக்கை செலுத்தி இருந்தனர். மேலும் 35 கிராம் தங்கம், 197 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

அதே போல், சென்னி மலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரொக்கமாக ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 983 பணம் மற்றும் தங்கம் 13 கிராம், வெள்ளி பொருட்கள 80 கிராம் ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

உண்டியல் திறப்பு மற்றும் எண்ணும் பணியில் சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை கோவில் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பக்தர்கள் கவனத்துக்கு

கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், தங்களது காணிக்கைகளை கோவில்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்று, தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. எனினும், தீபாராதனை காட்டும் பூஜை தட்டுகளில் பலரும், தங்களது காணிக்கைகளை செலுத்துவது வழக்கமாக உள்ளது. உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை மட்டுமே, சில மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் திறக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்படுகிறது. அர்ச்சனை தட்டுகளில் விழும் காணிக்கை, தனிநபர்களையே சென்றடைகிறது. எனவே, கோவில்களில் உண்டியல்களில் மட்டுமே, காணிக்கை செலுத்த பக்தர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கோவில் உண்டியல்களில் பணம், நாணயங்கள் மட்டுமின்றி தங்கம், வௌ்ளி நகைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. அதுதவிர, சிலர் தங்களது மனக்குறைகளை, கோரிக்கைகளை தாள்களில் எழுதி உண்டியல்களில் செலுத்தி, பிரார்த்தனை செய்பவர்களும் உண்டு.

தமிழகத்தை பொருத்தவரை, திண்டுக்கல் மாவட்டம், பழனிமலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் ( பழனிமலை முருகன் கோவில்) அதிகளவில், பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தும் கோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு தான் பக்தர்களின் வருகை ஆண்டுதோறும் மிக அதிகமாக உள்ளது. சமீபத்தில், இக்கோவிலில் உண்டியல் காணிக்கை 20 நாட்களில், 3.80 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகை மாதம், ஐயப்ப சீசன் காரணமாக, பக்தர்களின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளதும், இதற்கு முக்கிய காரணமாகும்.

Updated On: 9 Jan 2023 8:38 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு