/* */

91.67 அடியாக குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (மார்ச்.15) காலை நிலவரப்படி 91.67 அடியாக குறைந்தது.

HIGHLIGHTS

91.67 அடியாக குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
X

Erode news, Erode news today- பவானிசாகர் அணை (பைல் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 92 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

இன்று (மார்ச்.15) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்;-

நீர் மட்டம் - 91.67 அடி (105 அடி) ,

நீர் இருப்பு - 22.69 டிஎம்சி (32.8 டிஎம்சி) ,

நீர் வரத்து வினாடிக்கு - 806 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து வினாடிக்கு 817 கன அடி),

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,800 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீரும், காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 300 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடி நீரும் என் மொத்தம் 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 15 March 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...