/* */

ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் "ஓவர் கோட்' திட்டத்திற்கு எதிர்ப்பு

Erode news, Erode news today- ஐசிடிஎஸ் மையங்களில் பணிபுரியும் ஊழியர்களை ஓவர் கோட் அணியச் சொல்லும் அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் ஓவர் கோட் திட்டத்திற்கு எதிர்ப்பு
X

Erode news, Erode news today- ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர்.

Erode news, Erode news today- ஐசிடிஎஸ் மையங்களில் பணிபுரியும் ஊழியர்களை ஓவர் கோட் அணியச் சொல்லும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விஜய்மனோகரன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மணிமாலை ஆகியோர் கூறியதாவது, தமிழகத்தில் பொதுவாகவே வெப்பமான காலநிலை நிலவுகிறது. எனவே, ஓவர் கோட் அணிந்து வேலை செய்வது கடினம் என்பதால், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றனர்.

மேலும், 10-க்கும் குறைவான குழந்தைகள் உள்ள மையங்களை மூடி அவர்களை முக்கிய மையங்களுடன் இணைப்பது மறுபரிசிலனை செய்ய வேண்டும். பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பலன்களை உயர்த்துதல்.பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பகொண்டு வருதல். எல்பிஜி கட்டணம் ரூ.1205, முழு மின் கட்டணம் வழங்க வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக கோடை விடுமுறை வழங்குதல். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு GPF, GPF கீழ் கடன், அரசு ஊழியர்களுக்கு இணையாக 1 ஆண்டு மகப்பேறு விடுப்பு. 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு. பணிமுறைப்படுத்தல் காலம் முறை ஊதியம் மற்றும் 2 அல்லது 3 மையங்களின் பணிகளை ஊழியர்களிடம் ஒப்படைக்க கூடாது என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர்கள் ராதாமணி, சாந்தி, பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 April 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்