/* */

அந்தியூர் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

Erode news, Erode news today- தற்கொலை செய்துகொண்ட வாலிபர் கேசவமூர்த்தி (கோப்பு படம்)

Erode news, Erode news today- அந்தியூர் அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சரசு. இவர்களுடைய மகன் கேசவமூர்த்தி (வயது 28). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் ஹாஸ்டல் அட்டென்டராக பணிபுரிந்தார்.

இவருக்கும் திருப்பூர் மாவட்டம், முத்தூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, ஈரோடு லக்காபுரத்தில் உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) காலை திருமணமும் நடக்க இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை, ஆலாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கேசவமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 May 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்