/* */

ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

Erode news, Erode news today-தவுட்டுப்பாளையத்தில் குடோனுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில், மின் வாரிய இளநிலை பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 3 ஆண்டு சிறை
X

Erode news, Erode news today- தவுட்டுப்பாளையத்தில் குடோனுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ( கோப்பு படம்)

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவருக்கு சொந்தமான குடோனுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக தவுட்டுப்பாளையம் மின்சாரவாரிய அலுவலகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மின்சார வாரிய இளநிலை பொறியாளர் .ராமலிங்கம் என்பவர் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஈஸ்வரமூர்த்தி லஞ்சம் கொடுக்க மறுத்து வந்தார். ஆனால் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று இளநிலை பொறியாளர் ராமலிங்கம் வற்புறுத்தினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில், மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டதால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ராமலிங்கத்தை சிக்க வைக்க, ஈஸ்வரமூர்த்தி முடிவு செய்தார்.

இதனால் ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில், கடந்த 3-3-2005 அன்று காலை 9.15 மணிக்கு இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து ஈஸ்வரமூர்த்தி ரூ.10ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை தந்ததால், அதை வாங்கிய ராமலிங்கம் சிக்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இளநிலை பொறியாளர் .ராமலிங்கத்தை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இதுதொடர்பாக அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட மின்சார வாரிய இளநிலை பொறியாளர் ராமலிங்கத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒருமாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் இன்னொரு பிரிவிலும் 3 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதம் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். அதன்படி 3 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு, அரசு சம்பளம் கணிசமாக வழங்கப்படும் நிலையில், அரசு பணி சார்ந்து வரும் பொதுமக்களிடம் இப்படி முறைகேடாக லஞ்சம் பெறுவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற கடுமையான சட்டநடவடிக்கைகளுக்கு பிறகு, லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 21 Dec 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’