/* */

ஈரோட்டில் போதை ஊசி விற்பனை செய்த 11 பேர் கைது

Erode news, Erode news today-போதைக்காக மாத்திரைகளை பவுடராக்கி, ஊசிகளில் ஏற்றி விற்பனை செய்த 11 வாலிபர்களை, ஈரோடு போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

ஈரோட்டில் போதை ஊசி விற்பனை செய்த 11 பேர் கைது
X

Erode news, Erode news today- போதை ஊசி ( கோப்பு படம்)

Erode news, Erode news today- ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியவலசு, பெரியசேமூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், கருங்கல்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன், மற்றும் சஞ்சீவ்குமார், ஷாருக்கான், ஜெகநாதன் உள்பட 11 வாலிபர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை 'ஆன்லைன்' மூலம் வாங்கி, அதனை பவுடராக்கி இருமல் மருந்துடன் சேர்த்து தண்ணீரில் கலந்து ஊசியில் ஏற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 11 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து போதைக்காக பயன்படுத்திய மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரு டன் குட்கா பறிமுதல்;. சிவகிரி பகுதிகளில் குட்கா விற்ற ஒன்பது பேர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்தவர் வேல்முருகன், 48. இவரின் தம்பி சந்திரசேகர், 45. இருவரும் சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே பட்டேல் தெருவில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் போதைப் பொருளான குட்காவை பட்டேல் தெருவில் வாடகைக்கு குடோன் எடுத்து மளிகை பொருள் மற்றும் அதற்குள் மறைமுகமாக வைத்து விற்பனை செய்வதாக கோவை மண்டல திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலை பெருந்துறை உட்கோட்ட ஏ.எஸ்.பி கௌதம் கோயலுக்கு தெரிவித்தனர். ஏ. எஸ்.பி கௌதம் கோயால் உத்தரவின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று காலை, சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள வேல்முருகன் மற்றும் இவரின் தம்பி சந்திரசேகருக்கு சொந்தமான வாடகை குடோனை போலீசார் மறைமுகமாக கண்காணித்தனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வந்த ஒரு டன், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப் பொருள் மூட்டைகளை குடோனில் அடுக்கி வைத்தபோது மறைந்திருந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு பெருந்துறை உட்கோட்ட ஏ. எஸ்.பி கௌதம் கோயால் குட்கா வைக்கப்பட்டிருந்த குடோனை ஆய்வு செய்து விசாரணை செய்தார். மேலும் மளிகை கடை உரிமையாளர்கள் வேல்முருகன், சந்திரசேகர் மற்றும் வாகன ஓட்டுநர் தங்கராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு மளிகை கடைகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்து வருவது தெரியவந்தது.

இதனை அடுத்து அதிரடி நடவடிக்கையை தொடங்கிய போலீசார், சிவகிரி பழைய பஸ் நிலையத்தில் கடை நடத்தி வரும் அந்தோணி டென்னிஸ் 28, சிவகிரி கந்தசாமி பாளையத்தில் கடை நடத்தி வரும் பாலசுப்பிரமணியன் 52, அதேபோல் சிவகிரி அருகே வாழைத் தோட்டத்தில் கடை நடத்தி வரும் மரியமுத்து செல்வன் 36, காரவலசில் மளிகை கடை நடத்தி வரும் ஜெயமுருகன் 43, சிவகிரி அருகே அஞ்சூரில் கடை நடத்தி வரும் அன்னபாண்டியன் 47 , ஜெயபாலன் 40 ஆகியோரின் கடைகளில் போலீசார் திடீர் ஆய்வு செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் வைத்திருந்ததாக ஒன்பது நபர்களை கைது செய்தனர்.

Updated On: 26 Dec 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்