/* */

10 ம் வகுப்பு தேர்வு முடிவு; ஈரோடு மாவட்டத்தில் 94.53 % பேர் தேர்ச்சி..!

Erode news, Erode news today- தமிழ்நாட்டில், 10 ம் தேர்வு முடிவு வெளியானது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

10 ம் வகுப்பு தேர்வு முடிவு; ஈரோடு மாவட்டத்தில் 94.53 % பேர் தேர்ச்சி..!
X

Erode news, Erode news today- 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ‌.

Erode news, Erode news today - தமிழ்நாட்டில், 10 ம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 10 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.,19) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியானது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 24,657 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 12,229 பேரும், மாணவிகள் 12,428 பேரும் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 11,287 மாணவர்களும், 12,022 மாணவிகளும் என மொத்தம் 23,309 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.30 சதவீத மாணவர்களும், 96.73 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.43 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.53 ஆகும். அதன்படி, மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 7-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 May 2023 5:30 AM GMT

Related News