/* */

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

erode news, erode news today- அந்தியூர் அருகே கடன் தொல்லையால் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
X

 erode news, erode news today- தற்கொலை செய்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சென்னியப்பன். (கோப்பு படம்)

erode news, erode news today- அந்தியூர் அருகே கடன் தொல்லையால் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விஷம் குடித்து, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் பிரிவு வாஸ்துநகரை சேர்ந்தவர் தங்கராசு மகன் சென்னியப்பன் (வயது 39). இவரது மனைவி கீதா (வயது 28). இவர்களுக்கு சரத் (வயது 6 ), லோகேஸ்வரன் (வயது 3) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னியப்பன், அந்தியூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், சென்னியப்பன் சொந்த விவசாய நிலத்தை விற்று பள்ளிபாளையம் பிரிவு வாஸ்துநகரில் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். இதனால், வீடு வாங்கிய வகையில் கடன் ஏற்பட்டுள்ளது. அதனால், சில நாட்களாக கடனை கட்ட முடியாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து அந்த வீட்டை விற்பனை செய்து, கடனை கட்டி விடலாம் என்று தனது மனைவியிடம் கூறிய வந்ததாக தெரிகிறது. இதற்கு மனைவி கீதா அதற்கு சம்மதிக்காததால், நேற்று முன்தினம் மாலை சென்னியப்பன், வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை மீட்டுஅந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்க கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சென்னியப்பன், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசில் அவரது மனைவி கீதா புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் 'ஸ்நேகா' தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Updated On: 21 Dec 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்