/* */

"நிலம் செயலி" மென்பொருள் சேவையினை துவக்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ”நிலம் செயலி" மென்பொருள் சேவையினை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நிலம் செயலி மென்பொருள் சேவையினை துவக்கி வைத்த அமைச்சர்
X

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ”நிலம் செயலி" மென்பொருள் சேவையினை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துகறையின் சார்பில் "நிலம் செயலி" மென்பொருள் சேவை துவக்கிவைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய வேளாண் பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னனு சாதனங்களின் பயன்பாடுகள் நிறைந்த தற்போதைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும், அனைத்து வகையான மக்களிடையேயும் இன்றியமையாத அங்கமாக செல்லிடைபேசி செயலிகள் மாறிவிட்டன.

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல்துறை போன்ற துறைகளின் மூலம் விவசாயப் பெருமக்களுக்கு வழங்கப்படும் முக்கிய திட்டங்களை பதிவு செய்து ஆவணப்படுத்தவும், அவ்வாறு வழங்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் உடனுக்குடன் பார்வையிடவும், கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக "நிலம் செயலி" உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியானது ஈரோடு மாவட்ட நிர்வாகம், யங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழு ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள நிலம் செயலியானது ஈரோடு மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும் NILAM (New Improved livelihood through Agricultural Modernization and Management) திட்டம், தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் முக்கிய திட்டமான "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" ஆகிய திட்ட கிராம ஊராட்சிகளில் பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், இச்செயலியானது பல்வேறு நிலை அலுவலர்களால் பயன்படுத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள், வட்டார அளவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், துணை வேளாண்மை மற்றும் துணை தோட்டக்கலை அலுவலர்கள், கிராம அளவில் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் (வேளாண் வணிகம்) ஆகியோர்களால் பயன்படுத்தப்படவுள்ளது, நிலம் செயலியானது ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் NILAM திட்ட கிராமங்கள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம ஊராட்சிகளில் பின்வரும் முறையில் பயன்படுத்தப்படவுள்ளது.

திட்டங்கள் செயல்படுத்தப்படும் 64 கிராமங்களை இச்செயலியில் பதிவேற்றம் செய்தல். இக்கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளின் விபரங்களை கணக்கெடுப்பு செய்து அவர்களின் பெயர், தொலைபேசி எண், பாத்தியப்பட்ட நிலப்பரப்பு, சர்வே எண், பாசன நீர் ஆதாரம், மின் வசதி, நுண்ணீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ள விபரம், சாகுபடி செய்யும் பயிர்கள் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து செயலியில் பதிவு செய்தல் இக்கிராமங்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும்.

துறைவாரியான சேவைகளைான நில உரிமை ஆவணங்கள் பெற்று வழங்கல், கிணறு, ஆழ்குழாய் கிணறு, பண்னை குட்டை போன்ற பாசன நீர் ஆதாரங்களை உருவாக்குதல், மின் இணைப்பு பெறுதல், நுண்ணீர் பாசனம் அமைத்தல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, உயர் விளைச்சல் ரக பயிர் விதைகள் வழங்கல், இயற்கை விவசாய சான்று வழங்கல், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் வழங்கல், கடன் வசதி செய்தல், PM KISAN மற்றும் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டங்களில் இணைத்தல், வேளாண் விளைபொருட்களுக்கு விற்பனை வசதி ஏற்படுத்துதல் மற்றும் பிற திட்ட சேவைகள் என சேவைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்படும் பொழுது அன்னறய தினமே இச்செயலிலயில் பதிவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் NIILAM திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களின் பட்டியலை சேகரித்து வைத்து கொள்ளுதல் மற்றும் தேவையின் போது நமக்கு காட்டுதல், இக்கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளின் அடிப்படை விபரங்களை சேமித்து வைத்துக் கொள்ளல் மற்றும் நமது பார்வைக்குத் தேவைப்படும் பொழுது காட்டுதல், விவசாயிகளின் அடிப்படை வசதிகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்துதல், A1 - நுண்ணீர் பாசன வசதி, மின் இணைப்பு, பாசன நீர் ஆதாரம், நிலவுடைமை ஆவணம் உள்ளவர்கள், A - மின் இணைப்பு, பாசன நீர் ஆதாரம், நிலவுடைமை ஆவணம் மட்டும் உள்ளவர்கள், B - பாசன நீர் ஆதாரம், நிலவுடைமை ஆவணம் மட்டும் உள்ளவர்கள், C -நிலவுடைமை ஆவணம் மட்டுமே உள்ளவர்கள் மற்றும் D நிலம் உடையவர்கள் ஆனால் மேற்கண்ட எந்த வசதிகளும் இல்லாதவர்கள். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் செயல்படுத்திய திட்டங்களை பதிவேற்றம் செய்யப்படுபதை ஏற்று பதிவு கொள்ளல், செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் அக்குறிப்பிடட் விவசாயியின் நிலை மாற்றத்தினை மேற்கொள்ளுதல் ஊதாரணமாக A- A1, B - A. அறிக்கை வழங்கல், ஒவ்வொரு விவசாயிக்கும் என்னென்ன திட்டங்கள் வழங்கப்பட்டன என்ற அறிக்கை காட்டுதல், ஒவ்வொரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட திட்ட சேவை எத்தனை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் காட்டுதல், ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை விவசாயிகளின் நிலை உயர்த்தப்பட்டடுள்ளது என்ற விபரத்தைக் காட்டும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்செயலியானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் NILAM திட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படும் திட்ட சேவைகளை பதிவு செய்து ஆவணப்படுத்தவும், இத்திட்டங்களின் முன்னேற்றங்களை உடனுக்குடன் கண்காணித்து ஆய்வு செய்யவும், திட்டங்களின் பயன்களை மதிப்பீடு செய்யவும், ஆலோசனைகள் வழங்கவும், இவற்றின் மூலம் இக்கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும் மிக்க பயனுள்ளதாக அமையும் என மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, நிலம் செயலி உருவாக்கிய யங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் தொடர்பாக திட்ட விளக்க பிரச்சார ஊர்தியினையும் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடப்பு 2022-23ம் ஆண்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புத் திட்டம் (Food And Nutrition Security - FNS) - சத்துமிகு சிறுதானியங்கள் (Nutri Cereals) என்னும் திட்டம், ஈரோடு மாவட்டத்தில் 91.8 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் ஒரு இனமாக சோளம், கம்பு, இராகி, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் திட்ட விளக்கப் பிரச்சார ஊர்திகள் இயக்கப்படவுள்ளன. இந்த ஊர்திகளில் சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானியங்களின் சிறப்புகள், மானிய விவரங்கள், பயிர் பாதுகாப்பு, மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான ஒலி பெருக்கி விளம்பரங்கள் செய்யப்படுவதுடன், அவை தொடர்பான துண்டறிக்கைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் முதன்மையாக விவசாயம் செய்யப்படும் கிராமங்களில் இந்த பிரச்சார ஊர்திகள் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 80 பகுதிகளில் ஊர்திகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.முன்னதாக, தொழிலாளர் உதவி ஆணையர், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பணியிடத்தில் விபத்தில் மரணமடைந்த கட்டுமானத் தொழிலாளர்களின் 8 குடும்பத்தினருக்கு தலா ரூ.5,00,000/- வீதம் ரூ.40,00,000/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வெ.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கஸ்தூரி, இணை இயக்குநர் வேளாண்மை) சின்னச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், துணை இயக்குநர்கள் ஆசைத்தம்பி (வேளாண்மை), சண்முகசுந்தரம் (வேளாண்மை மற்றும் விற்பனை வணிகத்துறை), மரகதமணி (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை) சாவித்திரி (செயலாளர்- வேளாண்விற்பனை குழு), விஸ்வநாதன் (செயற்பெறியாளர் வேளாண் பொறியியல்துறை), தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேசன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Dec 2022 11:00 AM GMT

Related News