/* */

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை அவசர ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை அவசர ஆலோசனை கூட்டம்
X

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் முனைவர் ஜெ.அஸ்லம் பாஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் பொறியாளர் மாப்பிள்ளை மீரான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் ஜிபைர் அகமது, மாவட்டத் துணைத் தலைவர் பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் எம். ஜவஹர் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னையில் நடைபெறும் விழா நிகழ்ச்சிக்கு செல்வதற்கு ஆலோசனை வழங்கினார்.

சிறுபான்மை துறை நிர்வாகி அய்யுப்கான், பிராமண பெரிய அக்ரஹாரம் இப்ராஹிம், ஐ என் டி யு சி மாவட்டத் துணைத் தலைவர் ஆர். பாபு, ஆர்.கார்த்தி,சாம் கமலேசன் ஆகியோர் கலந்து கொண்ட அவசர கூட்டத்தில் வருகிற 3-ம் தேதியன்று சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் தலைமை அலுவலகம் அருகில் பா.ஜ.க. அரசால் இளம் தலைவர் ராகுல் காந்தியை பொய்யான அரசியல் ரீதியாக தகுதி இழப்பு செய்த அநீதியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய துணை அமைப்புகளான எஸ்.சி துறை, சிறுபான்மை துறை, மற்றும் ஓபிசி துறைகள் சார்பாக மாநில அளவில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை சார்பாக சுமார் 100 பேர் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளம் தலைவர் ராகுல் காந்தி மீது பொய்யாகத் திணிக்கப்பட்ட தகுதி இழப்பை பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லையெனில் ஈரோடு மாநகர் மாவட்டம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்களான உண்ணாவிரத போராட்டங்கள்,மனித சங்கிலி,தர்ணா போராட்டங்களான அறவழி போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Updated On: 1 April 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்