/* */

ஈரோடு அதிமுக பிரமுகரை கொலை செய்தது ஏன், சரணடைந்த ரவுடிகள் பரபரப்பு வாக்குமூலம்

Erode Rowdy List-ஈரோடு அதிமுக பிரமுகரை கொலை செய்தது ஏன் என்று சரணடைந்த ரவுடிகள் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

Erode Rowdy List
X

Erode Rowdy List

Erode Rowdy List

ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகரை சேர்ந்தவர் மதி என்ற மதிவாணன்(40). அ.தி.மு.க. பிரமுகர். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் அம்மா பொது இ—சேவை மையம் நடத்தி வந்தார்.

கடந்த 2-ம் தேதி இரவு இ—சேவை மையம் முன் 4பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்கிடையில், மதிவாணனை கொலை செய்ததாக ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகரை சேர்ந்த நிஜாமுதீன்(35), அதேபகுதியை சேர்ந்த வேல்முருகன்(21), கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த தேவா( 21), நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த விக்கி(25) ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

அவர்கள் நீதிமன்ற நடைமுறைப்படி சேலம் மாவட்டம் ஓமலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நீதிமன்ற அனுமதியின் பேரில் மூன்று நாட்கள் காவலில் எடுத்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: -

கொலையாளிகள் 4 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. 4பேரிடமும் வீடியோ பதிவுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளோம்.

நிஜாமுதீன், விக்கி உட்பட 4 பேரும் மதிவாணன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தான். மதிவாணன் கடந்த 2015ம் ஆண்டு ஈரோடு மரப்பாலம் நால் ரோடு டாஸ்மாக் கடையில் ரோகித் என்ற வெங்கடேஷ் என்பவரை வேறொரு ரவுடியான ரமேஷ் என்ற பிரகலாதனை ஏவி விட்டு கொலை செய்தார்.

அதன்பின், இறந்து போன ரோகித் என்ற வெங்கடேஷ் உடன் இருந்த கலை என்ற கலைச்செல்வன், குணா என்ற குணசேகரன் ஆகியோரை பிரகாலதனுக்கு எதிராக மதிவாணன் தூண்டிவிட்டுள்ளார்.

இதனால், கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்த பிரகலாதனை, மதிவாணனின் பேச்சை கேட்டு கலையும், குணாவும் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு கலையும், குணாவும் ரவுடியாக வளம் வந்துள்ளனர்.

கலை, குணாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மதிவாணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் நிஜாமுதீன் இரு தரப்புக்கும் இடையே வந்து சமரசம் செய்துள்ளார்.

பின்னர், மதிவாணனிடம் குறிப்பிட்ட தொகையை பெற்று கலை, குணாவுக்கு செட்டில் செய்துள்ளார். அதன் பின்னர், அடி தடி சம்பவத்தில் நிஜாமுதீனுக்கும், மதிவாணனுக்கும் நேரடியாக முட்டி கொண்டது. இதில், நிஜாமுதீன் மதிவாணனை அசிங்கப்படுத்தியுள்ளார்.

இதனால், நிஜாமுதீன் மீது மதிவாணனுக்கு விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் பிரகலாதனின் நண்பர்கள் பழிக்கு பழியாக கலையையும், குணாவையும் ஒரே நேரத்தில் கொலை செய்தனர்.

இதன் பின்னர், கடந்த மாதம் மதிவாணன், அவரது பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்திருந்த விக்கி என்ற வாலிபரிடம், நிஜாமுதீனை கொலை செய்யும் படி கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் நேரடியாக நிஜாமுதீனுடன் நடந்ததை கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த நிஜாமுதீன், மதிவாணனை இனியும் விட்டால் வெங்கடேஷ், பிரகலாதன், கலை, குணா போன்று நம்மையும் கொலை செய்து விடுவான் என கருதி, உடனடியாக திட்டம் திட்டியுள்ளனர்.

இதன்பேரில் கடந்த 2ம் தேதி மதிவாணன் அவரது இ-சேவை மையத்தின் வளாகத்தில் செல்போன் பார்த்தபடி உட்கார்ந்திருந்தபோது, நிஜாமுதீன், விக்கி தலைமையில் 4பேரும் அங்கு சென்று மதிவாணன் சுதாரிப்பதற்குள் வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு உடைய உள்ளதால் இன்று மாலை அவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 9:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...