ஈரோடு ஜவுளிச் சந்தையில் மொத்த வியாபாரம் மந்தம் : வியாபாரிகள் வருத்தம்

ஈரோடு ஜவுளிச் சந்தையில் மொத்த வியாபாரம் மந்தமடைந்துள்ளதாக, வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு ஜவுளிச் சந்தையில் மொத்த வியாபாரம் மந்தம் : வியாபாரிகள் வருத்தம்
X

கோப்பு படம்

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே, ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு 280 தினசரி கடைகள், 740 வாரச்சந்தை கடைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளிகள் குறைந்த அளவுக்கு விற்கப்படுவதால் இங்கு எப்போதும் பொது மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

குறிப்பாக இங்கு நடைபெறும் வாரச்சந்தை பிரசித்தி பெற்றது. திங்கட்கிழமை இரவு முதல், செவ்வாய்க்கிழமை மாலை, வரை ஜவுளிச்சந்தை நடைபெறும். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மொத்தமாக வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

கொரோனா தாக்கம் காரணமாக தற்போது தினசரி கடைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைக்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், கடந்த சில வாரமாக ஜவுளிச்சந்தை விற்பனை மந்த நிலையிலேயே இருந்து வருகிறது. சில்லரை விற்பனை ஓரளவு நடந்து வந்தாலும், மொத்த விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று, ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை, 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதே சமயம் மொத்த வியாபாரம் வெறும் ,30 சதவீதமே மட்டுமே நடந்ததாக வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். வரும் வாரம் புரட்டாசி மாதம் பிறப்பதை ஒட்டி, இந்த மாதத்தின் கடைசியில், வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Updated On: 14 Sep 2021 11:15 AM GMT

Related News