/* */

ஈரோடு மாநகரில் வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாநகர் 60 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மெகா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாநகரில் வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்
X

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் (பைல் படம்).

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் முதல் டோஸ், மற்றும் இரண்டாம் டோஸ் போடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடந்து வருகிறது. முதலில் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காட்டிய மக்கள் பின்னர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி போடும் மையங்களில் இரவுலேயே வந்து காத்திருந்து காலையில் வரிசையில் நின்று போட்டுச் சென்றனர். பின்னர் வாக்குச்சாவடி அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் வரும் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்து இருந்தனர். இதன்படி ஈரோடு மாவட்டத்திலும் வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி போடும் முகாம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. தினமும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 12ஆம் தேதி தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 12ஆம் தேதி ஈரோடு மாநகர் பகுதிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளது. ஒரு வார்டுக்கு ஒரு தடுப்பூசி முகாம் என்ற அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். இதில் கோவிஷில்டு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போடப்படும். இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 9 Sep 2021 11:15 AM GMT

Related News