/* */

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விதிமுறை மீறல் புகார்களை தெரிவிக்கலாம்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிமுறை மீறல் குறித்து புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விதிமுறை மீறல் புகார்களை தெரிவிக்கலாம்...
X

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 3 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை 6 குழுக்களிடமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:

பறக்கும் படை குழு எண்-1: 7094488017, குழு எண்-2: 7094488049, குழு எண்-3: 7094488072, நிலையான கண்காணிப்பு குழு எண்-1: 7094488076, நிலையான கண்காணிப்பு குழு எண்-2: 7094488982, நிலையான கண்காணிப்பு குழு எண்-3: 7094488983 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 94890 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதே போல், மாவட்ட தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 1800 425 0424 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0424 2256782, 0424 2267672 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் பறிமுதல்:

மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள் 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணம், ரூ.10,000-க்கும் அதிக மான பரிசு பொருட்கள், மதுபானம் எடுத்துச் செல்வது, பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய ஆவணங்களோ அல்லது தவறுகள் ஏதும் இல்லாதபட்சத்தில், அவற்றை திரும்ப பெற மாவட்ட அளவில் மேல் முறையீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில், கூடுதல் கலெக்டர், தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட கருவூல அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு செயல்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கட்டணமில்லா 1800 425 0242 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Jan 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு