/* */

ஈரோடு மாவட்டத்தில் 201.80 மில்லி மீட்டர் மழை

ஈரோடு மாவட்டத்தில் 201.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 201.80 மில்லி மீட்டர் மழை
X

பெருந்துறை சீனாபுரம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழையின் போது எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டத்தில் 201.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை (நேற்று) மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 5 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

பின்னர் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழை நீர் சாலையில் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழை பெய்ததால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மாவட்டத்தில் திங்கட்கிழமை (செப்.25) நேற்று காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை (செப்.26) இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 23.00 மி.மீ

கோபி - 23.20 மி.மீ ,

பவானி - 3.80 மி.மீ ,

பெருந்துறை - 75.00 மி.மீ ,

கொடுமுடி - 10.20 மி.மீ ,

மொடக்குறிச்சி - 7.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 7.00 மி.மீ ,

சென்னிமலை - 22.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 2.40 மி.மீ ,

அம்மாபேட்டை - 17.20 மி.மீ ,

பவானிசாகர் - 1.60 மி.மீ ,

கொடிவேரி - 3.00 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 6.20 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 201.80 மி.மீ ஆகவும், சராசரியாக மழைப்பொழிவு 11.87 சதவீதமாகவும் பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Sep 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!