/* */

கஞ்சா பதுக்கியவர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களின் தொகுப்பை இங்கு காண்போம்.

HIGHLIGHTS

கஞ்சா பதுக்கியவர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ரேவண்ணன் .

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே தம்புரெட்டி கோபூரில் சட்ட விரோதமாக கஞ்சா தூள் பதுக்கி விற்பனைக்காக வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பர்கூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த ரேவண்ணன் (வயது58) என்பவர், அவரது வீட்டின் முன்பு உள்ள புளியமரத்தின் அடியில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டிரைவர் தற்கொலை

பெருந்துறையை அடுத்துள்ள சுள்ளிப்பாளையம், ஐயப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் (45). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களிலும் சிகிச்சை பெற்று நோய் குணமாகாத நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட பாக்யராஜ் வாழை மரத்துக்கு செலுத்தும் விஷ ஊசியை தனது கையில் செலுத்திக் கொண்டு வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அவரது மனைவி விஜயலட்சுமி உடனடியாக, அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் வைத்து சூதாட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கடத்தூர் அடுத்த காசிபாளையம் அருகே உள்ள அரசமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி (53), கிருஷ்ணன் (68), பெருமாள் (56), பரமேஸ்வரன் (50), நஞ்சப்பன்(62), முருகேசன் (50) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சீட்டுக்கட்டுகள், பணம் ரூ.7,050 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மாணவி தற்கொலை

கோபி அருகே நம்பியூரை சேர்ந்தவர் அமுதா மகள் வர்சா (15) என்பவர் நம்பியூர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.சரியாக படிக்காமல் கொரோனா காலத்தில் வாங்கி கொடுத்திருந்த செல்போனில் படம் மற்றும் பாட்டு பார்த்து கொண்டே இருந்ததால் அவரிடம் இருந்து செல்போனை பெற்றோர் திரும்ப வாங்கிக் கொண்டனர். அதன் பிறகு சரியாக சாப்பிடாமல் அடம்பிடித்து திரும்ப செல்போனை வாங்கி கொண்டதாகவும் , செல்போன் அவளிடம் இருந்தால் படிக்கமாட்டாள் என்பதால் அமுதா பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் சொல்லி செல்போனை வாங்கி வைத்து கொள்ளுமாறும் பொது தேர்வு முடிந்த பின் செல்போனை அவளிடம் கொடுத்து விடலாம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் வர்சாவிடம் இருந்து செல்போன் பெறப்பட்டது. பள்ளியில் வாங்கி வைத்து கொண்டதால் வழக்கமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த வர்சா இரண்டு நாட்களாக வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பேசாமலும் சாப்பிடாமலும் இருந்தவர் நேற்று மாலை பள்ளியில் இருந்து வந்தவர் வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 March 2023 2:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்