ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டம்

ஈரோட்டில் ராகுல்காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டம்
X

கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

ஈரோட்டில் ராகுல்காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மோடி சாதிப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக, சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தனர். இதனையடுத்து ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர், ராகுல்காந்தி குற்றவாளி என்ற சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும், பதவியை தகுதி நீக்கம் செய்த பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 29 March 2023 3:30 PM GMT

Related News