கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குளித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
X

கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்க ளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளி த்து மகிழ்ந்து செல்கி றார்கள்.

இந்த நிலையில் சனி க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் கடந்த 2 நாட்களாக கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். நேற்று சனிக்கிழமை பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் விடுமுறை தினமான இன்று ஞாயிற்று க்கிழமை கொடிவேரிக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப் பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடு ம்பத்துடன் வந்திருந்தனர்.

இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்தனர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.

இதே போல் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இதை தொடர்ந்து குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குதுகளித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்றனர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர். இதனால் இன்று பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

Updated On: 18 Sep 2023 11:40 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    August 16 1947 ott release date-'ஆகஸ்ட் 16 1947' திரைப்படத்தை OTT -ல்...
  2. இந்தியா
    திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் கடத்தல், தேடுதல்...
  3. அம்பத்தூர்
    பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. திருவில்லிபுத்தூர்
    கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிசெயலாளர்
  7. இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் கலகோட் பகுதியில் தீவிர பயங்கரவாத எதிர்ப்பு...
  8. பொன்னேரி
    அரிமா சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவள்ளூர்
    கர்நாடக அரசை கண்டித்து ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு...