/* */

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா

பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பெண்கள் வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர், பால் ஊற்றி வருகிறாா்கள்

HIGHLIGHTS

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
X

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பத்துக்கு புனித நீர் உற்றும் பெண்கள்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால் குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டம் விழா நடக்கிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வையொட்டி பால் குடம் எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டம் விழா நடக்கிறது. திரு விழா ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்களிலும் திருவிழா கடந்த மாதம் 21- ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25-ஆம் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. அதைத் தொடர்ந்து தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீர், பால் ஊற்றி வருகிறாா்கள். இதனால் எந்த நேரமும் கோயில் திரு விழா களைகட்டி காணப்பட்டது. இந்தநிலையில் நேற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தீர்த்தக் குடம், பால் குடம் எடுத்து கொண்டு பெண்கள் கோவிலுக்கு வந்தனர். ஈரோடு கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் திரளாக பால் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றார்கள்.

அங்கு அவர்கள் கம்பத்துக்கு பால் ஊற்றி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர் இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தார்கள். காவிரிக் கரைக்கு சென்ற அவர்கள் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குண்டம் விழா இன்று (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது.

இதையொட்டி நேற்று இரவில் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தயாராக வரிசையில் காத்திருந்தனர். இரவு 8 மணிக்கு மா விளக்கு பூஜையும், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் 8-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On: 4 April 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்