/* */

பள்ளிகள் விடுமுறை: ஈரோடு பஸ், ரயில் நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடச் செல்லும் மக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

HIGHLIGHTS

பள்ளிகள் விடுமுறை:  ஈரோடு பஸ், ரயில் நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
X

ஈரோடு பேருந்து நிலையம்(பைல் படம்)

பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஈரோடு பஸ், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஈரோடு பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மேலும் பள்ளிக்கூடங்களில் அரையாண்டு தேர்வு முடிந்து நேற்று முதல் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து சொந்த ஊர் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் இருக்கைகள் நிரம்பி விட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் தற்போது அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட மக்கள் குடும்பம் குடும்பமாக சென்ற வண்ணம் உள்ளனர். அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத இருக்கையில் இடம் பிடிக்க பயணிகள் நேற்று மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இதனால் நேற்று ரயில் நிலையங்களில் என எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே தெரிந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று காலை முதல் ஈரோடு பஸ் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கோவை, சேலம், கரூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது


Updated On: 25 Dec 2022 8:45 AM GMT

Related News