/* */

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணம்
X

மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா முன்னிலையில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் தொடங்கியது. பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் பவானி மெயின் ரோடு, பழைய காமதேனு திருமண மண்டபத்தில் தொடங்கியது. காவிரி ரோடு வழியாக சென்று சத்திசாலை, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது. அங்கு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம் எல் ஏ திருமகன் ஈவெரா பேசினார்.

Updated On: 29 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  4. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  6. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  7. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  10. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!