/* */

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு 51 ரூபாயும் உயர்த்தி தர வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
X

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பால்உற்பத்தியாளர் சங்கத்தினர்

கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி சித்தோடு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு பவானி, கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி சித்தோடு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு 51 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும். கால்நடை தீவனங்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தை அரசு இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. என்று சொல்லப்படும் பால் தரக்கட்டுப்பாட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பால் ஊற்றும் ஒவ்வொருவருக்கும் பாலின் அளவு மற்றும் தரத்திற்கான ஒப்புகை சீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

ஆவின் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களை பணி வரன்முறை செய்து கொடுக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக அமைச்சருடன் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் முதல் கட்ட போராட்டம் நடந்தது.

2-வது கட்ட போராட்டம் இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் நேற்று 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி பவானி அருகே சித்தோட்டில் உள்ள ஆவின் நிலையம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ராமசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகுசாமி, மாவட்ட தலைவர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து மாநில தலைவர் ராஜேந்திரன் பேசும் போது, தமிழக அரசு தற்போது மாட்டு பாலுக்கு 33 ரூபாய் 75 காசுகளும் எருமைப்பாலுக்கு 42 ரூபாய் 75 காசுகளும் கொடுக்கிறது. இதில் நிர்வாகச் செலவுக்கு லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் 25 காசு பிடித்தம் செய்து கொள்கிறது. இதைத்தொடர்ந்து நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து கடந்த 3 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

கடந்த மாதம் 10-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் மீண்டும் எங்களது போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். அரசு உடனே தலையிட்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றார். மனு கொடுத்தனர் காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஈரோடு மாவட்ட தலைவர் ராஜு நன்றி கூறினார். பின்னர் ஆவின் நிர்வாக மேலாளர் பேபியிடம் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து வருகிற 6-ந் தேதி சட்டசபையில் நடைபெறும் பால் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் வலியுறுத்தி பேச வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டம் இதேபோல் சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம்-புளியம்பட்டி பிரிவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் செல்லி கவுண்டர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Updated On: 4 April 2023 6:30 AM GMT

Related News