/* */

ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

Marathon Runner Game - ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

HIGHLIGHTS

ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
X

ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த ஈரோடு எஸ்பி சசிமோகன், எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆகியோர்

Marathon Runner Game - ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது .

உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது . ஆண்கள் , பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும் , பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில்,3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நந்தா கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பங்கேற்று ஆண்களுக்கான போட்டியையும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா பெண்களுக்கான போட்டியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டிகளில் ஆண்கள் பிரிவுக்கான ஓட்டம் பெருந்துறையில் நிறைவடைந்தது. ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Jun 2022 11:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?