/* */

தேசிய தொழிற்சான்றிதழ்களில் திருத்தம் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 15

தேசிய தொழிற்சான்றிதழ்களில் திருத்தம் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 15
X

பைல் படம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தேசிய தொழிற் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய கடைசி நாள் 15.04.2023என ஈரோடு.அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு 2014 முதல் 2021 ஆண்டு வரையில் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தேசிய தொழிற் சான்றிதழ்களில் உரிய திருத்தங்களை அதாவது பயிற்சியாளரின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் ஆகியவற்றை சரிசெய்து கொள்ள 15.04.2023 தேதி வரையில், ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு. இதனைத் தொடர்ந்து வேறு ஏதும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (அசல் மற்றும் நகல்)

1. 10 ஆம் வகுப்பு /8 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

2. ஐடிஐ மாற்று சான்றிதழ் ( ITI TC).

3. தேசிய தொழிற் சான்றிதழ் (NTC Certificate).

4. ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ்.

5. ஆதார் அட்டை.

6. குடும்ப அட்டை.

7. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2

8. பிறப்பு சான்றிதழ்.

ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், திருத்தப்படக்கூடிய திருத்தங்களுக்கு உரிய அசல் ஆவணங்கள் (Support documents) மற்றும் நகல்களை நேரில் எடுத்து வரவேண்டுமெனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 30 March 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  9. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  10. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!