/* */

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரம்.

HIGHLIGHTS

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரம்
X

ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்.

ஈரோட்டில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதேபோன்று சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிர் இழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாமல் இருப்பது தான். ஹெல்மெட் அணிந்திருந்தால் ஓரளவு உயிரை காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகள் முறையாக ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்பதை கண்காணிக்க போக்குவரத்து போலீஸாருடன் சட்ட ஒழுங்கு போலீசாரும் இணைந்து கண்காணித்து வந்தனர். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

இருந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் தான் சென்று வந்தனர். இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த மாதம் அக்டோபர் 13ஆம் தேதி ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது ஆண்டு ஒரே நாளில் மட்டும் உயிரோடு மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து பல்வேறு தரப்பினர் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஹெல்மெட் அபராதம் விதிக்கும் பணிக்கு சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று தற்காலிகமாக ஹெல்மெட்டுக்கு அபராதம் விதிக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு சவிதா பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் காலை 11 மணி வரை ஹெல்மெட் அணியாமல் சென்ற 50 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பன்னீர்செல்வம் பார்க் காளைமாடு சிலை பஸ் நிலையம் அருகே ஸ்சுவஸ்திக் கார்னர், ஜி.எச். ரவுண்டானா, கருங்கல் பாளையம், சத்தி ரோடு போன்ற பகுதியில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Updated On: 6 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  2. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  3. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  5. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  7. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  8. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  9. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  10. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?