/* */

ஈரோட்டில் மக்கள் குறைதீர் முகாம் : பயனாளிக ளுக்கு நலத்திட்டஉதவி வழங்கல்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தலா ரூ.8.42 லட்சத்தில் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையினை 6 பேருக்கு வழங்கினார்

HIGHLIGHTS

ஈரோட்டில்  மக்கள் குறைதீர் முகாம் : பயனாளிக ளுக்கு நலத்திட்டஉதவி வழங்கல்
X

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் ஈரோடு மாவட்ட  ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் .கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறுகோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக் கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 237மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், அரக்கன்கோட்டை கிராமத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.8.42 இலட்சம் மதிப்பிலான குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையினை 6 பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, இன்றைய தினம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் இன்றைய தினமே 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலாரூ.1520- மதிப்பிலான ஊன்று கோல்கள் ரூ.4560- மதிப்பீட்டிலும் மற்றும் 1 மாற்றுத்திறனாளிக்குரூ.600- மதிப்பீட்டிலான ஊன்றுகோல் எனமொத்தம் 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5160- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினிசந்திரா, உதவிஆட்சியர் (பயிற்சி) என்.பொன்மணி, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) குமரன்,உதவிஆணையர் (கலால்) சிவகுமரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் .கோதைசெல்வி, நிர்வாகப் பொறியாளர் ஜீவானந்தம், உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர்கள் சந்திர ஹரி, பிரசன்னா உட்படஅனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2023 8:17 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...