/* */

பொங்கல் தினத்தை காலிங்கராயன் தினமாக கொண்டாடி வரும் விவசாயிகள்

பொங்கல் அன்று முளைப்பாரி எடுத்து வந்து காலிங்கராயன் வாய்க்காலில் விட்டும், தீபங்கள் விட்டும் மரியாதை செலுத்தினர்

HIGHLIGHTS

பொங்கல் தினத்தை காலிங்கராயன் தினமாக கொண்டாடி வரும் விவசாயிகள்
X

பைல் படம்

750 ஆண்டு பாரம்பரியம் மிக்க காலிங்கராயன் வாய்க்காலை வெட்டியவர் காலிங்கராயன். இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் காலிங்கராயன் பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை காலிங்கராயன் தினமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி பொங்கல் அன்று முளைப்பாரி எடுத்து வந்து காலிங்கராயன் வாய்க்காலில் விட்டும், தீபங்கள் விட்டும் மரியாதை செலுத்துவர். இந்த நிலையில் காலிங்கராயன் தினத்தையொட்டி ஊஞ்சலூர் அருகே உள்ள கிளாம்பாடி பேருராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விட்டு மரியாதை செலுத்தினர்.

தை மாதம் 5-ந் தேதி, காலிங்கராயன் வாய்க்கால் திறக்கப்பட்ட தினமாகும். காலிங்கராயன் வாய்க்கால் ஈரோடு மாவட்டத்தில் ஏன், உலக அளவில் மிகப்பழமையான பாசன வாய்க்கால் என்ற பெருமை நமது ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலுக்கு உண்டு. கி.பி.1270-ம் ஆண்டு காலிங்கராயன் அணை கட்டும் பணியும், வாய்க்கால் வெட்டும் பணியும் தொடங்கின. சரியாக 12 ஆண்டுகள் நடந்த இந்த பணி கி.பி.1282-ம் ஆண்டு முடிந்தது. அந்த ஆண்டில் தை மாதம் 5-ந் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வாய்க்கால் திறக்கப்பட்டது. இன்று தை மாதம் 5-ந் தேதி. 740 ஆண்டுகளாக தொய்வின்றி பாசனம் தருகியது காலிங்கராயன் வாய்க்கால். ஆண்டுக்கு 10½ மாதம் விவசாயத்துக்கு தண்ணீர் தரும் பாசன திட்டமாக காலிங்கராயன் உள்ளது. கொங்குமண்டல தலைவர் 7.5 நூற்றாண்டுகளாக முப்போகம் விளையும் மண்ணை ஈரோடு விவசாயிகளுக்கு அளித்து உள்ள காலிங்கராயன் வாய்க்காலை வெட்டி அணையை கட்டியவர் காலிங்கராயன் என்பவர்.

இன்றைய ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகள் கொங்கு 24 நாடுகளாக இருந்தன. இந்த கொங்கு 24 நாடுகளில் முக்கிய இடம் பிடித்து இருந்த நாடுகளில் ஒன்று பூந்துறை நாடு.இந்த பூந்துறை நாட்டின் 2-வது தலைநகர் பகுதியாக வெள்ளோடு இருந்தது. வெள்ளோட்டின் அருகே உள்ள கனகபுரத்தில் நஞ்சயன் என்பவருடைய மகன் லிங்கய்யன்தான் காலிங்கராயன் வாய்க்காலை வெட்டிய காலிங்கராயன். இவர் பாண்டிய மன்னரால், கொங்கு நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.

இவர் தனது ஆட்சிக்காலத்தில் கொங்கு மண்டல பகுதிகளில் ஏராளமான ஏரிகள் அமைத்தார். கோவில்களை புனரமைப்பு செய்தார். தொழில்நுட்பம் அந்த காலக்கட்டத்தில் அவர் கட்டியதுதான் காலிங்கராயன் அணைக்கட்டு. பவானி கூடுதுறையில் பவானி ஆறு கலக்கும் இடத்திற்கு முன்னதாக பவானி ஆற்றை தடுத்து அணை கட்டும் பணியை தொடங்கினார். அணைக்கு தேவையான கற்கள் பெரிய பெரிய பாறைத்துண்டுகளாக ஊராட்சிக்கோட்டை மலையில் இருந்து எருமை பூட்டிய வண்டிகளில் கொண்டு வரப்பட்டன.

கற்களை இணைக்க இரும்பு காய்ச்சி துளைகளில் ஊற்றப்பட்டது. Also Read - தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு 634 பேருக்கு ரூ.3.41 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர் இதுபோல், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து கொடுமுடியை அடுத்த ஆவுடையார் பாறை வரை 56½ மைல் நீளத்துக்கு வாய்க்கால் வெட்டினார். சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறந்த தொழில் நுட்பங்களுடன் கூடிய பாலங்கள் அமைத்து 700-க்கும் மேற்பட்ட மதகுகள் வைத்து வாய்க்கால் அமைத்தார்.

நதிகள் இணைப்பு அணையும், வாய்க்காலும் காலிங்கராயன் கட்டிய காலக்கட்டத்தில் உலகில் பல நாடுகள் வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்தன என்பதும், பல நாடுகளில் கலாசாரம், பண்பாடு கொண்ட மனிதர்கள் வசித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட காலத்திலேயே தமிழ்நாட்டில் தனது ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் 2 ஜீவ நதிகளை இணைக்கும் அற்புத திட்டத்தை நிறைவேற்றியவர் காலிங்கராயன். பவானி ஆற்றை தடுத்து அணை கட்டினார்.

இந்த தண்ணீர் நொய்யல் ஆற்றில் சென்று கலக்கிறது. சத்தியம் காலிங்கராயன் வாய்க்கால் பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளிக்கிறது. ஈரோட்டில் உள்ள மக்கள் காலிங்கராயன் பாசன தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த வரலாற்று சிறப்பு மிக்க, வாய்க்காலை வெட்டிய காலிங்கராயன், இதே நாளில் நான் இந்த வாய்க்கால் தண்ணீரை தொடமாட்டேன் என்று சத்தியம் செய்து, கனகபுரத்தில் இருந்து படை பரிவாரங்களுடன், ஊத்துக்குளி சென்றார். தியாகம் சொந்த செலவில் அனைத்து பணிகளையும் செய்து, ஒரு துளி நீரைக்கூட பருகாமல் மொத்தமாக மக்களுக்கு அர்ப்பணித்த தியாகத்துக்கு சொந்தக்காரரான காலிங்கராயனை போற்றி புகழ்வோம்.

அவரது தியாகத்தால் உருவான காலிங்கராயன் விவசாயிகள் அவரது நினைவாக பாசனப்பகுதிகளில் பல ஆண்டுகளாக பொங்கல் வைத்து வழிபாடு செய்து வந்தனர். சமீப காலமாக இந்த வழக்கம் மீண்டும் எழுச்சி பெற்று உள்ளது. காலிங்கராயன் வெறும் வாய்க்கால் அல்ல. அது தமிழ் சமுதாய கலாசாரம், பண்பாட்டின் வரலாற்றுச்சுவடு. காலிங்கராயன் அணை மற்றும் வாய்க்காலை எந்த பழுதும் இன்றி பாதுகாப்போம் என்ற உறுதியை இப்பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் ஏற்று வருகின்றனர்.

Updated On: 17 Jan 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!