/* */

ஈரோடு புத்தகத் திருவிழா: ஆகஸ்ட் 5 -ல் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஈரோட்டில் நடைபெறும் புத்தகத்திருவிழாவை ஆகஸ்ட 5 ல் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்

HIGHLIGHTS

ஈரோடு புத்தகத் திருவிழா: ஆகஸ்ட் 5 -ல் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
X

ஈரோடு புத்தகத் திருவிழாவை காணொலி மூலமாக முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் 26.07.2022 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்ததாவது :

18 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா தேசியத் தரத்தோடும் மாநிலம் தழுவிய விதத்திலும் நடைபெறவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 5 -ஆம் தேதிமுதல் 16 ஆம் தேதிவரை 12 நாட்களுக்கு ஈரோடு வீரப்பன் சத்திரத்திலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அளவிலும் தமிழக அளவிலும் புகழ்பெற்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தக நிறுவனங்கள் வருகை புரிகின்றன. 230 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன.மத்திய, மாநில அரசுகளின் பதிப்பகங்கள் அனைத்துமே இத்திருவிழா வில் பங்கேற்கின்றன.

உலகத்தமிழர் படைப்பரங்கம், படைப்பாளர் மேடை, மாலைநேர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஈரோடு மாவட்டப் படைப்பாளர் பக்ககவெளி அரங்கம், புத்தக வெளியீட்டு அரங்கம் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் அறிவியல் மேதை ஜி.டி நாயுடு விருது வழங்குதல் என பல சிறப்பம்சங்கள் இவ்வாண்டுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன.இத்திருவிழா நடைபெறுகிற இடம் ஈரோடு என்றாலும் மாநிலம் முழுவதிலுமுள்ள வாசகர்களையும் அயலகத் தமிழ் அன்பர்களையும் மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலி மூலம் திறந்து வைத்து விழாப்பேருரை நிகழ்த்தவுள்ளார்.

தொடக்கவிழா நிகழ்வில் பல்லாயிரம்பேர் பங்கேற்கும் அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டின் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வு ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.250 க்கும் மேல் புத்தகங்கள் வாங்கினால் நூல் ஆர்வலர் சான்றிதழ் வழங்குதல், உண்டியலில் சேமித்துப் புத்தகம் வாங்குவோருக்குக் கூடுதல் சலுகை என மாணவர் சார்ந்த பல சிறப்புத் திட்டங்கள் உள்ளன.இல்லந்தோறும் நூலகம் என்ற வாசகமே இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழாவின் முழக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தக விற்பனையில் 10% கழிவு கொடுக்கப்படுகிறது. கல்வி நிலைய நூலகங்களுக்கு அதிகக் கழிவு வழங்கப்படுகிறது.

அரிதினும் அரிதான நூல்களைப் பதிப்பிக்கும் பல பதிப்பகங்களும் புத்தக விற்பனையாளர்களும் பங்கேற்பதற்கு இந்த ஆண்டு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாசகர்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கநாள் நிகழ்வு மட்டும் மாலை 5 மணிக்குத் தொடங்கும். மீதி 11 நாட்களும் காலை 11 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை புத்தக விற்பனை நடைபெறும்.

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானம் விசாலமானது என்பதால் ஏற்பாடுகளும் மிக விரிவாக செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள்ளும், பேருந்து நிலையத்திலிருந்து அதிகத் தொலைவில்லாத இடத்திலும் பிரதான சாலைக்கு மிக அருகிலும் திருவிழா நடக்கும் மைதானம் உள்ளது.எத்தனை வாகனங்கள் வந்தாலும் எவ்வித நெரிசலும் இல்லாமல் நிறுத்த வசதியான இடமுள்ளது என்றார் மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின்குணசேகரன் தெரிவித்தார். உடன் பேரவைச் செயலர் ந. அன்பரசு, பொருளாளர் க. அழகன் ஆகியோர் இருந்தனர்.

Updated On: 27 July 2022 5:19 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...