/* */

ஈரோட்டில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்கஅலைமோதிய கூட்டம்

பொங்கல் பண்டிகையின் போது மக்கள் அதிகளவில் காய்கறிகளை சமைத்து சாமிக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

HIGHLIGHTS

ஈரோட்டில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்கஅலைமோதிய  கூட்டம்
X

பைல் படம்

பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோட்டில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க கூட்டம் அலைமோதியது. காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி, ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு, தக்காளி, பாகற்காய், வெண்டைக்காய், பீட்ரூட், வெண்டைக்காய், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.

நேற்று தினசரி சந்தையில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று கிலோ ரூ.35 வரை விற்பனையானது. இதேபோல் ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தை, பெரியார் நகர் உழவர் சந்தையிலும் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் அதிகளவில் காய்கறிகளை சமைத்து சாமிக்கு பிரசாதமாக வழங்குவார்கள். இதன் காரணமாக நேற்று தினசரி சந்தை மற்றும் உழவர் சந்தைகளில் வழக்கத்தை விட இருமடங்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

இதனால், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு வருமாறு:தக்காளி -ரூ.28, கத்தரிக்காய் -ரூ.60, வெண்டைக்காய் மொச்சை -ரூ.60, பாகற்காய்-ரூ.26, பாகற்காய்-ரூ.48, சுரைக்காய்-ரூ.12, பூசணிக்காய்-ரூ.22, பாகற்காய்-ரூ.16, பாகற்காய்-ரூ.48, கொத்தமல்லி-ரூ. 34, பாகற்காய் -ரூ.35, வெள்ளை முள்ளங்கி -ரூ.16, சிவப்பு முள்ளங்கி -ரூ.24, சின்ன வெங்காயம் -ரூ.50 , வெங்காயம் -ரூ.32, முருங்கைக்காய் -ரூ.160, வெல்லம் -ரூ.28, கேரட் -ரூ. 42, பீட்ரூட் -ரூ.42, முட்டைகோஸ் -ரூ.14, இஞ்சி -ரூ.60, பீன்ஸ் -ரூ.50, உருளைக்கிழங்கு -ரூ.42, காலிபிளவர் -ரூ.30.

இதேபோல் பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோட்டில் நேற்று கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் விற்பனை மும்முரமாக நடந்தது. வீட்டின் முன் கோலம் போட பல வண்ணங்களில் விற்பனையில் இருந்த கோலம் பொதிகையை பெண்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி சென்றனர். மாட்டுப் பொங்கலைக் கொண்டாட மாட்டுக்குக் கட்டக்கூடிய அலங்காரக் கயிறுகளையும் வாங்கிச் சென்றனர். இதனால் ஈரோட்டில் நேற்று கடை வீதிகளில் பொதுமக்கள்

Updated On: 15 Jan 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!