/* */

வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 1,249 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலமாக மாற்றம்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 5 ஆண்டுக்கு செயல்படுத்தப் படுகிறது

HIGHLIGHTS

வேளாண் வளர்ச்சி திட்டம்  மூலம் 1,249 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலமாக மாற்றம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 1,249 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்க, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 5 ஆண்டுக்கு செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் சாகுபடிப் பரப்பினை 11.75 இலட்சம் எக்டேர் உயர்த்துவதற்கு, 12,525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசுநிலங்களை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், அனைத்து கிராமங்களிலும், ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியும், அதன் மூலம் தன்னிறைவும் அடைவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2021–22ல், 60 பஞ்சாயத்துகளில் 2022–23ல், 44 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பஞ்சாயத்துகள் வரும் ஆண்டுகளில் தேர்வு செய்யப்படும். இப்பஞ்சாயத்துகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் என அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற முயலும்.

இதன்படி கடந்த, 2021–22ல், 31 தரிசு நிலத்தொகுப்பு கண்டறியப்பட்டு, நில நீர் ஆய்வு செய்து, 11 பஞ்சாயத்துகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 இடங்களுக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, 20 தரிசு நில தொகுப்பு கண்டறிந்து, 13 இடங்களில் நில நீர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இத்திரிசு நில தொகுப்பில் முட்செடி, புதர்கள் அகற்றி, சாகுபடிக்கு ஏற்ற நிலமாக மாற்றப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை மூலம் தரிசு நில தொகுப்பில், நுண்ணீர் பாசனம் அமைக்கப்படும். தோட்டக்கலை பயிர் மூலம் நிலையான வருவாய் தரும் பழப்பயிர்கள், காய்கறி தோட்டம், மரவகை பயிர் சாகுபடி செய்யப்படும். வேளாண் பொறியியல் துறை மூலம், 10 எச்.பி., மின் மோட்டார் பொருத்தி, நீர் இறைக்க வகை செய்யப்படும்.

இதுபற்றி, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறியதாவது: இத்திட்டத்தில் ஈரோடு யூனியனில் மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்வு செய்து, தரிசு நிலத்தில் புதர்கள் அகற்றி, ஆழ்துளை கிணறு அமைத்து நீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இலவசமாக தென்னங்கன்று நடவு, வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்ய மானியம், கை மற்றும் விசை தெளிப்பான், தார்பாலின் வழங்கப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை, தடுப்பணை, மண் வரப்புகள், கல் வரப்புகள் அமைத்து, நீர் சேகரிப்பு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில், 2021–22ல், 4.25 கோடி ரூபாய், 2022–23ல், 97.40 லட்சம் ரூபாய் என, 5.23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இத்தொகுப்பின் மூலம் தரிசு நிலங்களாக இருந்த, 1,187 விவசாயிகளின், 1,249 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.


Updated On: 21 Dec 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்