சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

சீமானை கைது செய்ய கோரி, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு
X

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், சீமானை கைது செய்யக்கோரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி.எம். ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் ஈ.ஆர்.எஸ். பிரகாஷ், வினோத் மாரியப்பா ஆகியோர் முன்னிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது. அதில், நாம் தமிழர் கட்சியை சார்ந்த சீமான் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்களையும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் அவதூறாக பேசி வருகிறார். காங்கிரஸ்காரர்கள் ஒழுங்காக இல்லாமல் எங்களை விமர்சித்துக் கொண்டு பேசினால் உங்களுக்கும் இதேகதி என்பது போல கொலை மிரட்டும் தொணியில் பேசி வருகிறார். அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதில், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ், துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், மாவட்ட துணைத்தலைவர்கள் எம் ஆர் அரவிந்த் தாஸ், கே.எஸ்.செல்வம், அம்மன் மாதேஸ்வரன், முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாஜலம், பாஸ்கர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. சென்னை
    அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
  2. சென்னை
    சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
  3. அவினாசி
    அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
  4. பெரம்பலூர்
    பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
  5. உசிலம்பட்டி
    புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
  6. பெரம்பலூர்
    மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
  7. ஸ்ரீரங்கம்
    திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
  8. உதகமண்டலம்
    இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
  10. இராமநாதபுரம்
    இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...