/* */

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்: 285 மனுக்கள் பெறப்பட்டது.

Erode Collector Office Complaints-ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்:  285 மனுக்கள் பெறப்பட்டது.
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர் கூட்டத்தில் மனு கொடுக்கும் பெண்.

Erode Collector Office Complaints-ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 285 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் காலமான ஆதிஷேசன் என்பவரின் மனைவிக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணிநியமன ஆணையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன், உதவி ஆணையர் (கலால்) ஜெயராணி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 April 2024 6:33 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  2. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  5. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்