/* */

தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல் மூடைகள்

ரேஷன் கடைகளுக்கான அரிசி விநியோகம் செய்வதற்காக தஞ்சை மாவட்டத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் மூடைகள் வந்தன

HIGHLIGHTS

தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் வந்த  2 ஆயிரம் டன் நெல் மூடைகள்
X

ஈரோடு ரயில் நிலையத்துக்கு தஞ்சையிலிருந்து வந்த நெல் மூடைகள்

தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல் வந்தது. ஈரோடு ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரெயில் நேற்று ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு வந்தடைந்தது. பின்னர் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது விநியோகத்திட்டம் மீள் பார்வை...

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடி மக்களுக்கும் குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, மாதந்தோறும் இன்றியமையாப் பொருட்களை நல்ல தரத்தோடும், நியாயமான விலையிலும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே நியாய விலைக் கடைகள் வாயிலாக விநியோகம் செய்வதே பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்நாட்டிலிருந்து பசி, பட்டினியை அறவே ஒழித்தல்.இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குடி மக்களை காத்தல். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை செறிவூட்டி வழங்குவதன் மூலம் சத்து குறைபாட்டை குறைத்தல் .வீட்டு உபயோக எரிபொருள்களான மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உருளை ஆகியவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குதல்.

குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் அணுகும் வகையில் நியாய விலைக் கடைகள் அமைத்தலை உறுதி செய்தல். ஏழை எளிய மக்கள் வாங்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குதல்.மாதந்தோறும் சரியான நேரத்தில் இன்றியமையாப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.

குடும்ப அட்டைதாரர்களின் புகார்களை திறம்பட கையாளுதல். தற்போது செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு செல்ல இயலாமல் இன்னலுறும் கிராமங்களுக்கு புதிய பகுதி நேரக் கடை அமைக்கும் திட்டம். நிர்ணயிக்கப்பட்ட வழித் தடங்கள், உரிய நேரத்தில் இன்றியமையாப் பொருட்களை நகர்வு செய்தல். நடைமுறையை மேம்படுத்துதல், அமலாக்கத்தை மேலும் கடுமையாக்குதல் மற்றும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம், கடத்தலை குறைத்தல். நியாய விலை அங்காடிகளுக்கு மின் ஆளுமை மூலம் தவறு இல்லாத சரியான ஒதுக்கீடு மற்றும் நுகர்வினை அளித்தல் போன்றவை பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட வகுக்கப்பட்டுள்ள செயல் திட்டங்களாகும் என பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 31 March 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு