/* */

ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், திருமண உதவி தொகை திட்டத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க என தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். திருமணமாகும் ஏழை, எளிய பெண்களுக்கு அரசு வழங்கி வந்த திருமண உதவி தொகையை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்க வேண்டும்.. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை அமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை விவசாயிகள் தொடர்ந்து பெறும் வகையில் ஆதார் எண்களை இணைக்க விவசாய சங்கம், வருவாய் துறை, வேளாண் துறை சேர்ந்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும். வருகிற டிசம்பர் 28 ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாளை கட்சியின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை கூட்டணியில் கேட்டு பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில அரசியல் உயர்மட்டக்குழு உறுப்பினர் கவுதமன், விவசாய அணி மாவட்ட தலைவர் சம்பத்குமார். மண்டல தலைவர்கள் சீரமணியன், சின்னுசாமி, வட்டார தலைவர்கள் புவனேஸ்வரன், பழனிசாமி, வடக்கு மாவட்ட தலைவர் விஜய் சேமலை, செய்தி தொடர்பாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Dec 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!